Posts

வெள்ளோடு நத்தை

Image
அப்பத்தா நாச்சம்மா தன் மகன் நாச்சிமுத்துக் கவுண்டனிடம் ஒரு புதிர்க் கேள்வி கேட்டாள்.  " வெள்ளோடு புல்லு மேயும். அது என்னடா மகனே? " மகன் நாச்சிமுத்து கவுண்டர் பதில் சொன்னான்.  " மான் போல கொம்பு இருக்கும் அதுதானே அம்மா" ஆக, இந்த கேள்வியும் பதிலும் எதைக் குறிக்கின்றன?  வெண்மையான ஒட்டை உடையதும் மான் போன்ற கொம்பையும் கொண்ட நத்தை 🐌.  எப்போதாவது நீங்கள் நத்தையை பார்த்து" யானைக் கொம்பைநீட்டு! மானுக் கொம்பை நீட்டு என்று பாடி இருக்கிறீர்களா? " இனி பாடுங்கள். 

அப்பத்தா கதைகள்

அப்பத்தா கிராமத்து சிறுவர்களின் அன்புத்தோழி. கருப்பன கவுண்டரின் மனைவி அந்த அப்பத்தா அவள் சொல்லும் கதைகள் நாடோடி கதைகளாக இருக்கும்.  அதில் ஒன்றை இங்கு காண்போம்  கதையாம் கதையாம் காரணமாம் காரணத்தில் ஒரு தோரணமாம் தோரணத்தில் ஒரு தொக்கடாவாம்.  சொக்கடாவில் ஒருவைக்கப்பில்லாம். வைக்கப்பில்லைக் கொண்டு போயி மாட்டுக்கு போட மாடு இரண்டும் பால் கொடுத்ததாம்.  பாலக் கொண்டு போய் பிள்ளையார் தலையில ஊத்த  பிள்ளையார் பூக்குடுத்தாராம்.  பூவக் கொண்டு போயி ஆத்துல போட ஆறு ரெண்டு மீன் கொடுத்ததாம் மீனை கொண்டு போய் அப்பத்தா கையில கொடுக்க  அப்பத்தா ஆக்க தெரியாம  மேக்க ஓடிட்டாளாம்.  *****எப்படி இருக்கு அப்பத்தா கதை? ****